"நாட்டில் சட்டம் பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" - நீதிபதி சுந்தரேஷ்
நாட்டில் சட்டம் பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அடுத்த 20 ஆண்டுகளில் நீதித் துறையில் 70 முதல் 80 சதவீதம் பெண்கள் பணியாற்றுவார்கள் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்தார்.
சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள தனியார் சட்டக்கல்லூரி விழாவில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவால் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Comments